Advertisment

தன்னையும் விடுதலை செய்ய வேண்டி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு மனு! 

Ravichandran petitions Chief Minister to release himself!

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் தன்னையும் விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கும் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் தன்னை விடுதலைச் செய்ய வேண்டி, முதலமைச்சரின் அலுவலகத்திற்குகடந்த 2019- ஆம் ஆண்டு மனு அனுப்பியுள்ளதை ரவிச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு இசைவு தராமல் ஆளுநர் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்ததை ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, தன்னையும், சிறையில் உள்ள மற்றவர்களையும் நிர்வாக ஆணையின் வழியாக விடுதலைச் செய்யும்படி, ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe