Advertisment

ஈவிகேஎஸ் வழக்கு  தொடர்ந்தால்  சந்திக்க  தயார்!  தேனி எம்.பி.  ஓ.பி.ஆர். 

கடந்த மாதம் நடந்துமுடிந்த தேனி பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டி போட்டனர். இதில் துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் 65 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கி ஈவிகேஎஸ் -ஐ தோற்கடித்து வெற்றி பெற்றார்.

Advertisment

o

இப்படி ஓபிஎஸ் மகனான ரவீந்திர நாத்குமார் வெற்றி பெற்றும்கூட இந்த வெற்றியில் தில்லு முல்லு நடந்துள்ளது என்றும், அதை எதிர்த்து வழக்கு தொடரப்போகிறேன் எனஈவிகேஎஸ் இளங்கோவனும் கூறி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் தான் ஆண்டிபட்டியில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ஆர் (ஒ.பி.ரவீந்திரநாத் குமார்) வைகை டேம் பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பொழுது அங்கு கூடியிருந்த மக்களும் நன்றி தெரிவித்து விட்டு பத்திரிக்கை யாளர்களிடம் பேசிய எம்.பி. ஒ.பி.ஆரோ....தேர்தல் பிரச்சாரத்தில் நான் மக்களுக்கு சொன்னஅனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

குறிப்பாக மதுரை போடி அகல ரயில் பாதை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அந்த பணியை துரிதப்படுத்தி விரைந்து வரைந்து மக்கள் பணிக்கு கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறேன். மேலும் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் வேலை வாய்ப்பு பிரச்சினை குடிநீர், சுகாதாரம் உள்பட அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்பதை உறுதி கூறுகிறேன். நான் வெற்றி பெற்றதை எதிர்த்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வழக்கு போடுவதாக கூறியுள்ளார். ஆனால் எனது வெற்றி மக்கள் அளித்த தீர்ப்பு. அதற்கு நான் தலை வணங்குகிறேன். தோல்வி அடைந்தால் எதையும் பேசி விடலாம் என நினைக்க கூடாது .

o

ஜனநாயக நாட்டில் மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் தேனி தொகுதியில் அதிகம் வாக்களித்து வெற்றி பெறவைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எனக்குஎதிராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். மேலும் மத்திய அமைச்சர் பதவி என்பது மக்கள் பணி செய்வதற்காகதான். அது ஒரு பெரிய விஷயமல்ல. மத்திய மந்திரி பதவி காடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார்.

ஓபிஆருடன் மாவட்ட செயலாளர் சையது கான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் உள்பட மாவட்ட நகரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe