ADVERTISEMENT

முத்தலாக் சட்டத்தை  தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன்! ரவீந்திரநாத்குமார்  எம்.பி. 

08:21 AM Aug 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததின் பேரில் டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது..... தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்காக வருகை தந்துள்ளேன். மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் போன்றவற்றை யோசித்தது கூட கிடையாது. அதிமுகவின் முடிவுதான் இறுதியானது . முத்தலாக் சட்டத்தை பொருத்தவரை பிரதமர் மோடி அனைத்து பெண்களும் சமம் என்ற உரிமைக்காக அதனை கொண்டு வந்துள்ளார்.

ADVERTISEMENT

நான் தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன். தமிழக முதல்வருக்கு ஒரு மொழிக் கொள்கை குறித்து தெளிவான முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எந்த நிலைப்பாடு இருந்ததோ அதன்படியே தற்போது செயல்பட்டு வருகின்றன. பால் விலை உயர்வு குறித்து தமிழக முதல்வர் விரிவான அறிக்கையை தெரிவித்துள்ளார். எனவே அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. நாளுக்கு நாள் ஏற்படும் விலை உயர்வின் கட்டாயத்தினால் அனைத்து மக்களின் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்னை பொருத்தவரையில் தனி அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக என்ன விலை ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களில் பலர் நிறைந்த ஒருவனாகவே கருதுகிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு என்ன நிலைப்பாடானது பிரதமர் மோடியின் நிலைப்பாடாக உள்ளது. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் தங்களின் நிலைப்பாடுகளை அறிவிப்பார்கள். அடுத்த கட்ட தலைவர் மற்றும் தலைமை போன்றவற்றில் வெற்றிக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. தற்போது எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்கிறேன்.

பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் நண்பர்களாகவே பழகி வருகின்றனர் என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT