Advertisment

“ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்கு பதிலாக மாற்றுவழி வேண்டும்” - மக்கள் வேண்டுகோள்

Ration stores need an alternative to biometrics People's request

கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலம் நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த முறையை மாற்றி அரசு உடனடியாக நோய்த் தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

தமிழகம் முழுவதும் கரோனாஇரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், நாளொன்றுக்கு சுமார் 8,000 பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றுமக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், “தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் தங்களுடைய விரல் ரேகையைப் பதிவுசெய்வதின் மூலம் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பயோமெட்ரிக் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, மாற்றுவழியை அரசு கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

biometric ration shops Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe