Ration shops will be open today

Advertisment

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று (05/11/2023) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் இன்று வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை சுற்றறிக்கை மூலம் ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள்வாங்க பொது இடங்கள் மற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் முன்கூட்டியேரேஷன் பொருள்களையும் மக்கள் வாங்குவதற்கு ஏதுவாகதயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இன்று ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.