Advertisment

தீபாவளிக்காகக் கூடுதல் நேரம் இயங்கும் ரேஷன் கடைகள்!

Ration shops running overtime for Deepavali!

தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 3- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் அதிகரித்து உணவு வழங்கல் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் தலைமையில் 11/10/2021 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சரால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் படி தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் 2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் அதிகபட்சமாக முன்நர்வு முழுமையாக முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 01/11/2021, 02/11/2021 மற்றும் 03/11/2021 ஆகிய தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 08.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நியாய விலைக்கடைகள் காலை 08.00 மணி முதல் மாலை 07.00 வரை திறந்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

Advertisment

deepavali ration shops Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe