ration shops old peoples tn govt

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேசன்கடைக்குச் சென்று பொருட்களை வாங்க விலக்கு அளித்தது தமிழக அரசு.

Advertisment

இது தொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் ஆணையர் சஜ்ஜன்சிங், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisment

அந்த சுற்றறிக்கையில், "சரிபார்ப்பு இயந்திரத்தில் கைரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே ரேசன்பொருள் தரப்படும் என்ற முறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைக்கு சென்று பொருள் வாங்க முடியாதோர் அங்கீகார சான்றைப் பூர்த்திச் செய்து அளிக்க வேண்டும். கோரிக்கைப் பெறப்பட்ட அன்றே அங்கீகார சான்றை கடைப்பணியாளர் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் சேர்க்க வேண்டும். அங்கீகாரச் சான்றில் குறிப்பிடப்படும் நபர் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் பெறலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.