தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக ஐந்து முக்கியக் கோப்புகளிள் கையெழுத்திட்டார்.

Advertisment

அதில் ஒன்றான கரோனா நிவாரணத் தொகையை,அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் (இரண்டு தவணையாக 4,000 ரூபாய்)கொடுப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி முதலில் 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் பேரில், அரசு வழங்கும் கரோனா நிவாரணத் தொகையை வழங்க ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்வழங்கும் பணியைத் தொடங்கினர்.

Advertisment