நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் புத்தூர், மஞ்சக் கொல்லை, அந்தனப்பேட்டை ஆகிய இடங்களில் நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

Advertisment

அப்போது மஞ்சக் கொல்லை, அந்தனப்பேட்டை ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் அன்பளிப்பு பொருட்கள் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து சிக்கல் கிராம பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.