ration rice lorry police cuddalore district

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் கடை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்துடன் பண்ருட்டி சீலைக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி வைத்திருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அங்கு விரைந்து சென்ற பண்ருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், அந்த லாரியை மடக்கி பிடித்தனர். பின்னர் லாரியில் இருந்த 13 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதனுடைய மதிப்பு ரூபாய் 4 லட்சம் ஆகும். அரிசி கடத்தலில் உதவியாக இருந்த ரவி என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்ததில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு அரிசியை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து பண்ருட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.