திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்குவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு 50 கிலோ எடைகொண்டு சாக்கு மூட்டையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து தொடர்ந்து சோதனை செய்ததில் 23 மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த ராஜேந்திரன் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.