Advertisment

கைரேகை வைத்தால்தான் இனி ரேஷன் பொருட்கள்..! 

Ration items only if fingerprinted ..!

கரோனா நிவாரணத் தொகை வழங்குவதற்காக ரேஷன் கடைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கைவிரல் ரேகை பதிவு முறையை இன்றுமுதல் (01.07.2021) மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் மீண்டும் இன்றுமுதல் செயல்பட துவங்கியுள்ளன. எனவே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், விலாசம் மாற்றுதல், உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான பணிகளும் இன்றுமுதல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன.

Advertisment

எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள 8 லட்சத்து 7 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் 1,222 நியாய விலைக் கடைகள் மூலம் கைவிரல் ரேகை பதிவிடும்முறை இன்றுமுதல் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. மேலும் குடும்ப அட்டைகளுக்கான சேவைகளும் இன்றுமுதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தி உடனடியாக குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

trichy ration shop
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe