Advertisment

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு; போலீஸ் உதவி ஆணையருக்கு பிடிவாரண்ட்

ration civil supply issue for public distribution system 

கோவை மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதில் வருவாய்த் துறையினருடன் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜூ என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜூவுக்கு கடந்த மாதம் கோர்ட்டு சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisment

இந்த விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே கடந்த 11ம் தேதி திருச்சியில் பணியாற்றி வரும் ராஜூவுக்கு போலீசார் மூலம் நேரில் சென்று அழைப்பாணை கொடுத்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். தற்போது ராஜு பதவி உயர்வு பெற்று திருச்சி தில்லை நகர் பகுதியில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

trichy Coimbatore tnpds
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe