kv

Advertisment

சென்னை பெரியார் திடலில் 17.3.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வழக்குரைஞர் த.வீரசேகரன் அறிமுகவுரையாற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைக்கிறார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார். ர.கந்தசாமி நன்றியுரையாற்றுகிறார்.

திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் நடைபெறும் இப்படத்திறப்பில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.