சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த வியாழக்கிழமை இரவு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், என்னால் முடிந்தவரை இருவரையும் இணைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்களோ மேலே உள்ளவர்கள் என மோடியை காரணம் காட்டினர். இதனால் அமமுகவிற்கு வந்து விட்டேன்.
தினகரனுக்கு ஆதரவு அளித்ததால் 18 பேர் பதவியை எடுத்துவிட்டு, தற்போது எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் தற்போது 3 பேர் எம்எல்ஏவாக உள்ளோம். என்னிடம் கொறடா தாமரை ராஜேந்திரன், ‘முதல்வர், துணை முதல்வர் உங்கள் மேல் கோபமாக உள்ளனர். நோட்டீஸ் விட கூறுகின்றனர் சபாநாயகரையும் நோட்டீஸ் விட கூறுகின்றனர்’ என்றார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Rathinasabapathy 444.jpg)
‘ஏற்கனவே 18 பேருக்கு நோட்டீஸ் விட்டபோது நாங்கள் ஏமாந்து விட்டோம். சபாநாயகருக்கு ஏற்கனவே ஒரு கை உடைந்து போய் உள்ளது. நீங்கள் என்னை நீக்க போடும் கையெழுத்துத்தான் கடைசி கையெழுத்து, அதன்பிறகு கையெழுத்து போட உங்கள் 2 பேருக்கும் கை இருக்காது’ என கூறினேன்.
அத்துடன் அந்த பேப்பரை மூலையில் போட்டுவிட்டனர். தவறு, அயோக்கியத்தனம் கூடிவிட்டது. ஆளுங்கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களோடு இருந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இவர்கள் தற்போது வைத்து இருக்கும் கூட்டணி மானங்கெட்ட, மரியாதை கெட்ட கூட்டணி. 400 கோடி கொடுத்து பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டு கூட்டணி வைத்துள்ளனர். இவ்வாறு பேசினார்.
Follow Us