ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில் மேலும் ஒரு பெண் ஊழியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக அண்மையில் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்ப அது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றிய முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் அருள்சாமி, பர்வின், ஹசீனா, லீலா, செல்வி ஆகிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

 Rasipuram child selling case ... another female employee arrested!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக, அதிகாரப்பூர்வமற்ற வகையில் பல்வேறு அதிர் ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்ததால் முக்கிய குற்றவாளிகளான அமுதவல்லி, முருகேசன், அருள்சாமி ஆகியோரை மட்டும் முதல்கட்டமாக காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது.

Advertisment

இது தொடர்பாக சிபிசிஐடி நாமக்கல் மாவட்டம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் (மே 7, 2019) மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்து நீதிபதி கருணாநிதி, மூவருக்கும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

 Rasipuram child selling case ... another female employee arrested!

 Rasipuram child selling case ... another female employee arrested!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதையடுத்து, மூவரையும் காவலில் எடுத்த சிபிசிஐடி காவல்துறை அவர்களை சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்தது. எஸ்பி சாமுண்டீஸ்வரி தலைமையில் டிஎஸ்பி கிருஷ்ணன், ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் விசாரணை நடத்தினர். இன்று நடந்த முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் தற்போது சேலம் சர்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியரான சாந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.