Rare flower in Trichy! People flocked to see the miracle!

Advertisment

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் வசித்து வருபவர் நடராஜன். இயற்கை ஆர்வலரான இவர் தனது வீட்டில் பல்வேறு விதமான செடிகளை வளர்த்து வருகிறார்.

அந்தவகையில், இமயமலை சாரலில் வளர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இரவில் பூத்து விடியற்காலையில் உதிரும் மலரான ‘பிரம்ம கமலம்’ செடியை வளர்த்து வருகிறார். இந்தச் செடியில் 26ஆம் தேதி இரவு திடீரென பிரம்ம கமலம் மலர் மலர்ந்துள்ளது. இதனைக் கண்ட அவர்கள் குடும்பத்தினர், தங்கள் அக்கம் பக்கத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். இந்த அதிசயத்தைப் பார்க்க அவர்களின் அக்கம் பக்கத்தினரும் வந்தனர்.

செடியின் இலையிலிருந்து நீண்டு வளரும் காம்பில் இருந்து வெளிப்படும் மலர், தூய வெண்மை நிறத்தில் அழகுடன் காட்சியளிக்கிறது. இரவில் மட்டுமே பூக்கும் தன்மையுள்ள பிரம்ம கமலம் மலர், இறைவனுக்குஉகந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அம்மலரைத்தரிசித்து வணங்கிச் சென்றனர். நடராஜன் வீட்டில் உள்ளோர் பிரம்ம கமலம் மலருக்குப் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.