Advertisment

நம்பி வந்த இளைஞர்களின் அடிவயிற்றில் அடித்த ராபிடோ! 

இரு சக்கரவாகனம் இருந்தால் வேலை என்று நம்பி வந்த இளைஞர்களின் அடிவயிற்றில் அடித்துள்ளது ராபிடோ ஆப் நிறுவனம்.

Advertisment

இருசக்கர வாகனம் இருந்தால் வேலையும், ஊதியமும் உறுதி என்பதால் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் இந்த வேலையை பார்க்க இளைஞர்கள் விரும்புகின்றனர்.

r

ரேபிடோ பைக் பயன்பாடு என்பது ஒரு மொபைல் பயன்பாட்டின் மூலமாக மக்கள் விரும்பும் இடத்திற்கே கொண்டுச் செல்லும் ஒரு தளமாகும். குறைந்தபட்ச கட்டணம் மூன்று கிலோ மீட்டருக்கு 15 ரூபாய். அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 3 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் குறைவு, எளிதாகவும், வேகமாகவும் பயணிக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் உள் நகர பயணப் பிரச்சனையை மிகவும் சிக்கனமாக தீர்க்கிறது.

Advertisment

அந்த வகையில் இதனை 2015 ஆண் ஆண்டு பெங்கலூரில் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் பல மாநிலங்களில் கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழகத்திலும் இந்நிறவனம் கொண்டுவர முயற்சித்த நிலையில் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தான் சென்னை,சேலம் ,மதுரை, என பல மாவட்டங்களில் கொண்டுவரப்பட்டு ஆன்லைன் மூலமாக டுவிட்டர், முகநூல், என விளம்பரம் செய்யபட்டத்தின் மூலமாக சென்னையில் ஊபர், போன்ற மற்ற துறையில் பணிபுரிந்த இளைஞர்கள் தற்போது சொந்தமாக வாகனங்களை வாங்கி இந்த துறையில் களம் கண்டனர்.

b

அப்படி பயணித்த இவர்கள் தற்போது திடீரென சென்னையிலுள்ள மந்தவெளி, கே.கே. நகர், மீனம்பாக்கம் போன்ற ஆர்.டி.ஓ இந்த வாகனங்களை ஒரே இடத்திற்கு புக் செய்து வரவைத்து 37 பைக்குகளை பிடித்து வழக்கு போட்டுள்ளனர். அப்போதுதான் இந்த நிறுவனம் இன்னும் தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்பட்டது என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் அந்த இளைஞர்களின் சொந்த வண்டியையும் பறிகொடுத்து, வேலையும் இல்லாமல் வீட்டு வாடகையும் கொடுக்க முடியாமலும், பரிதாபத்தில் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு அந்த நிறுவன உரிமையாளர் மேல் வழக்கு தொடுக்கமால், இந்நிறுவனத்தின் தமிழகத்தின் மேனேஜரான ஆதித்தநாத் என்பவரை எந்த விசாரணையும் செய்யாமல் விட்டுவி்ட்டு, இந்த அரசு அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும். சட்டவிரோதமாக வாகனம் ஓட்டியது தவறுதான் என்றால் அதற்கு காரணமான ஆணிவேரை கண்டுகொள்ளாமல் இலையை பிடுங்குவது நியாயமா?

bike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe