Advertisment

தொழிலதிபர் ரன்வீர் ஷா பண்ணை வீட்டிலிருந்த 80 சிலைகள் பறிமுதல்!!!

ranvir shah

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். இதில் 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisment

மேல்மருவத்தூருக்கு அருகிலுள்ள முகல்வாடியில் ரன்வீர் ஷாக்கு சொந்தமான பண்ணைவீடு ஒன்று உள்ளது. தற்போது அந்த வீட்டில்தான் சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பண்ணை வீட்டிலும் சிலைகள் பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவ்வீட்டில் பதுக்கப்பட்டிருந்த80 சிலைகள் கிடைத்துள்ளன. இவற்றுள் தூண்களும் அடக்கம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த வாரம் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் பல சிலைகளும், தொன்மை பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்குமுன் தஞ்சாவூர், திருவையாறிலுள்ள அவரது அரண்மனையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியிருந்தனர் என்பதும்,இந்த சோதனைகளில் 100 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள சிலைகள் சிக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

IG Ponmanikavel Aaivu ponmanickavel ranvir shah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe