anna university

Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடத்தி வருகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டார்.

பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பில் பொதுவான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்கான 30 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இரண்டையும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சீத்தாராமன், பேராசிரியர் ராம்குமார், சேர்க்கை ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.