Skip to main content

படுகர் இனத்தை சேர்ந்த மாணவி  குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

Published on 06/08/2018 | Edited on 06/08/2018
tn

 

படுகர் இனத்தை சேர்ந்த மாணவி முதல் முறையாக குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து உள்ளார்.

 

கோத்தகிரி பகுதியில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் கோவையில் வேளாண் படிப்பு முடித்து பிறகு, ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தார். போக்குவரத்து தொழிலாளியான இவரது தந்தை ஓய்வு பெற்ற நிலையில், இவரது படிப்பு செலவிற்கு உதவ முடியாத நிலையில் இருந்ததால், பணம் படிப்பை நிறுத்த கூடாது என்ற நோக்கத்தில் , தனியார் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து அங்கேயே பணியின் போது படித்து வந்து உள்ளார்.

 

முதல் கட்டமாக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த இவர், தற்போது குரூப் 4 தேர்வை எழுதி உள்ளார். அதிலும் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து உள்ளார். இரவு பகலாக தான் படித்து வந்ததாகவும், தனது படிப்பிற்கான செலவிற்கு , குடும்பத்தையே நம்பி இருக்காமல் , தான் வேலைக்கு சென்று படித்தாலும், மிகுந்த ஈடுபாட்டோடும் கடின உழைப்போடும் படித்ததால் தற்போது இந்த இடத்தை பிடிக்க முயன்றதாக கூறுகிறார். கோத்தகிரி பகுதியில் படுகர் இனத்தை சேர்ந்த மாணவி, இதுபோன்று தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்து உள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து படித்து வருகிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

''மக்கள் சேவை ஒன்றுதான் உங்கள் லட்சியம்'' - குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் அறிவுரை

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

'People's service should be the only aim'- Chief Minister advises the winners of Group 4 examination

 

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்வானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பல லட்சம் பேர் தேர்வு எழுதி லட்சத்தில் ஒருத்தராக நீங்கள் எல்லாம் தேர்வாகி வந்திருக்கிறீர்கள். இப்படி லட்சத்தில் ஒருத்தராக இருக்கக்கூடிய உங்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்காக மட்டும் தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும். மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி. அந்த வகையில் அரசாங்கம் தீட்டுகின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அது மக்கள் நன்மைக்காகத்தான். அரசின் திட்டங்களையும் பல்வேறு சேவைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய மிக முக்கியமான பணியை நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.

 

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய எல்லோரையும் நான் பாராட்டுகிறேன். நீங்கள் எல்லோரும் அரசு ஊழியர்களாக ஆகி இருக்கிறீர்கள். அரசு ஊழியர்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காக வாழ்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த மேடையிலேயே நான் சொல்லியாக வேண்டும். கடந்த சனிக்கிழமை 23ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அதாவது இறக்கும் முன்பு உடல் உறுப்புகளை தானம் வழங்குபவர்களுடைய இறுதிச்சடங்கு இனி அரசு மரியாதையோடு மேற்கொள்ளப்படும் என்று சொல்லி இருந்தேன். மனிதநேயமிக்க உடல் உறுப்பு தானம் செய்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் ஒரு அரசு ஊழியர் தான்.

 

தேனி மாவட்டம் சின்னமனூரில் மூளைச்சாவடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேல் உடைய உடல் நேற்று அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இறுதிச் சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். வடிவேல் உடைய உடல் உறுப்புகளை தானமாக பெற்ற குடும்பங்களின் சார்பாக மட்டும் அல்ல அவருடைய குடும்பத்தினருக்கு தனிப்பட்ட என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் செய்தி உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த வகையில் அரசு ஊழியராக பணியாற்றிய வடிவேல் காலத்திற்கும் மக்களால் நினைவு கூறப்படுவார். ஒரு இயந்திரம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகமும் பழுது இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். அதுபோலத்தான் அரசு என்ற மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியர்களாகிய நீங்களும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்'' என்றார்.

 

 

 

Next Story

வெளியானது குரூப் 4 தேர்வு முடிவு

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Group 4 Exam Result Released

 

கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சுமார் 19 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.10,117 பணியிடங்களுக்கான  குரூப்-4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது. tnpscexams.in என்ற இணைய பக்கத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.