Advertisment

மதுவுக்கு அடிமையான மகன்; கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தாய்

ranipet sakkaramallur former police and his mother inciednt 

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராகுலன். இவரின்மனைவி வாணீஸ்வரி (வயது 53). இத்தம்பதியருக்கு ராஜேஷ் மற்றும் தினேஷ் (வயது 33) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள்இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டில் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் சென்னையில் உள்ள கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்த நிலையில், இவரின்செயல்பாடுகள் மற்றும் நன்னடத்தை சரியில்லாததால்காவலர் பணியில் இருந்து பணிநீக்கம்செய்யப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் தினேஷுக்குதிருமணமாகி மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், தினேஷ் மதுவுக்கு அடிமையானதால்கணவன், மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதினேஷின்மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

Advertisment

நேற்று வாணீஸ்வரிவீட்டில் மர்மமான முறையில்கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, தினேஷ் தனது தாயார் வாணீஸ்வரியிடம் பணம் கேட்டு தகராறு செய்தபோது, அவர் பணம் கொடுக்காததால், கேபிள் வயரை கொண்டு கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்தது விசாரணையில்தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் தினேஷைகைது செய்தனர். பணம் கேட்டுதராத தாயாரை மகனே கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe