ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது வெங்கடேசன். இவரது மனைவி 24 வயதான நிர்மலா. வெங்கடேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 வயது சஞ்சனா ஸ்ரீ, ஒரு வயதே ஆன ரித்திகா ஸ்ரீ என இரு குழந்தைகள்.

Ranipet incident

Advertisment

கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் பிப்ரவரி 2 ந்தேதி காலை வெங்கடேசனின் மனைவி நிர்மலா, குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கணவர் அழுது புரண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பிப்ரவரி 3 ந்தேதி இரவு வெங்கடேசன், தனது இரு மகள்கள் சஞ்சனா ஸ்ரீ, ஒரு வயதே ஆன ரித்திகாஸ்ரீ வுடன் வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே சென்னை டூ பெங்களூரு நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். அடுத்தடுத்த நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறந்தது அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது.