ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் கண்ணன் நகரை சேர்ந்தவர் ராஜன் வண்ணரசு(27). கல்வி நிறுவனம் நடத்தி வரும் இவர், தனது மகளின் திருமணத்திற்காக திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு அரக்கோணம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

Ranipet incident

Advertisment

Advertisment

உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி பகுதியில் காரின் பின்புறத்தில் அரசு பேருந்து உரசியது. இதையடுத்து கார் டிரைவர் வினோத் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வேகமாக ஆம்னி பேருந்து கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் ராஜன் விண்ணரசு அரசு பஸ்சில் வந்த புதுக்கோட்டை ஆயக்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி (33), காஞ்சிபுரம் அருகே உள்ள மின்னல் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த சற்குணன் (34) உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.