/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren_18.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழாந்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு கடையைத்திறந்து சிகரெட் தருமாறு காமேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் இந்த நேரத்தில் எல்லாம் கடையைத்திறக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் தனது நண்பர்களானஅஜித் குமார், சதீஷ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து கடையின் பூட்டை கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது பொதுமக்கள் அவரைத்தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் காமேஷ் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் ஆதாரங்களுடன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்துவிசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் சிகரெட் தருமாறு கடையின் உரிமையாளரிடம் கேட்டுத்தர மறுத்ததால் பூட்டை கத்தியால் வெட்டிய அராஜக சம்பவம் அரக்கோணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us