Advertisment

நேற்று பசு, இன்று மான், நாளை ? – வேட்டைக்கான வெடியால் உயிர் துடிக்கும் விலங்குகள்

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே காட்டு பன்றிக்காக மாங்கொட்டைக்குள் வைத்த நாட்டு வெடியை மாங்கொட்டை என நினைத்து கடித்ததால் பசுமாட்டின் வாய் கிழிந்து ரத்தம் சொட்டியது. அதற்கு ராணிப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதோடு, நாட்டு வெடியை வைத்த ஒரு இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது ராணிப்பேட்டை காவல்துறை. இந்த விவகாரம் மே 18ந்தேதி நடைபெற்றது.

Advertisment

மே 19ந்தேதி காலை அதே வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் காப்புக்காட்டுக்குள் இருந்து வந்த புள்ளி மான் ஒன்று, விலங்குகளை வேட்டையாடவும், காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களை காத்துக்கொள்ள வைக்கப்பட்ட நாட்டு வெடியை கடித்து மானின் வாய் கிழிந்தது.

Advertisment

m

இதனை காலை 11 மணியளவில் பார்த்த அப்பகுதி மக்கள் இதுப்பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து மானை பிடித்துச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நாட்டு வெடியை வைத்தது யார் என விசாரணை நடத்திவருகின்றனர்.

விவசாய பயிர்களை அழிக்கிறது, அதனை காக்கிறோம் என்கிற பெயரில் காப்பு காடுகள், மலையாடிவாரத்தில் உள்ள நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகள், காட்டு விலங்குகளிடம்மிருந்து பயிர்களை காக்கிறோம் என்கிற பெயரில் முறையற்ற வகையில் மின்சார வேலி அமைப்பது, சட்டத்துக்கு புறம்பாக நாட்டு வெடி தயாரித்து வரப்புகளில் வைப்பது என செயல்பட்டு விலங்குகளை கொல்கின்றனர்.

அதேபோல், வேட்டைக்காரர்களும் இதே நாட்டு வெடியை பயன்படுத்துக்கின்றனர். இதுயெல்லாம் தெரிந்தும் வனத்துறையோ, காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. புகார் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என புறம்தள்ளுகின்றனர். முன்கூட்டியே தடுத்து நிறுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என்பதில்லை. விலங்குகள் தானே என அலட்சியம் காட்டுவதற்கு முக்கிய காரணம் லஞ்சமே என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe