Advertisment

'ராணி' இதழின் ஆசிரியர் மரணம்  -பட்டுக்கோட்டை பிரபாகர் இரங்கல்!

Rani weekly magazine editor passed away

Advertisment

ராணி வார இதழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த 14 -ஆம் தேதி அவரது தாயார் மரணமடைந்த நிலையில் இன்றுராமகிருஷ்ணன் மரணமடைந்திருப்பது பத்திரிகையாளர்களையும் படைப்பாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராமகிருஷ்ணனின் மறைவிற்கு கீழ்கண்டவாறு இரங்கல் தெரிவித்திருக்கிறார் எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர், "ராணி வார இதழின் ஆசிரியர் ராமகிருஷ்ணன்என்கிற வணங்காமுடி இன்று நம்மை விட்டுநிரந்தரமாக நீங்கிவிட்டார். மிகவும் அன்பானவர். சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர். சிறப்பான சிந்தனையாளர். நல்ல ரசனையாளர். திறமையான கட்டுரையாளர். வணங்காமுடி என்கிற பெயரில் பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். புதிய திறமைகளைத் தேடித் தேடி ஊக்குவிப்பவர். நல்ல எழுத்தை, கருத்தை எங்கு கண்டாலும் அழைத்துப் பாராட்டி ஆனந்தப்படுபவர்.

தன் தாயாரின் உடல் நிலை சரியில்லை என்று சொந்த ஊருக்குச் சென்றவர் வயதான தன் தாயாருடன் தங்கி அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்.அந்தச் சமயம் ஃபோனில் என்னிடம் வெகுநேரம் பேசினார். தன் தாயாரின் உடல்நிலை தேறும்வரை சென்னை திரும்பமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னார்.சில நாட்களுக்கு முன்பு அந்தத் தாயாரை இழந்தார். தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டிய அவர் தன் உடல்நிலையில் அக்கறைக் காட்டத் தவறியிருக்கிறார்.

Advertisment

Ad

தனக்கு ஒரு வாரம் முன்பு வந்த காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாமல் வைத்தியம் பார்த்துக் காய்ச்சல் கட்டுப்பட்டதால் பேசாமல் இருந்து விட்டார்.நேற்று மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத் திணறலும் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட இன்று காலை நம்மைப் பிரிந்துவிட்டார். நெருங்கிப் பழகிய நண்பர் என்பதால் மனம் ஸ்தம்பித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடித் தவிக்கிறேன்."எனத் தெரிவித்துள்ளார்.

editor magazine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe