ADVERTISEMENT

சொன்னதை செய்த திமுக..."வேண்டாம் CAA-NRC" என வீட்டில் கோலமிட்டு நெத்தியடி...!

07:38 AM Dec 30, 2019 | kalaimohan

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு "Against CAA, Against NRC" என எழுதி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெசன்ட் நகரில் பொது இடம், வீட்டு வாசலில் கோலம் போடும் போராட்டம் நடத்திய 6 பெண்கள் காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில், "அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம். சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது" என கூறி கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.



இதேபோல், திமுக மக்களவை உறுப்பினரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழி டிவிட்டர் பக்கத்தில், "நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள்" என தெரிவித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மகளிரணியினர் வீடுகளில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என அறி்வித்திருந்தார்.



இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி்ர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், அந்த சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஸ்டாலின் வீடு, அவர் மருமகன் சபரிசன் வீடு மற்றும் கோலபாலபுரம் வீட்டின் முன்பு, இன்று அதிகாலை "வேண்டாம் CAA-NRC" என கோலம் போடப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT