Skip to main content

இப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

ramzan peoples food chennai high court


தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தை ஒட்டி, இஃப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க அனுமதி கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா ஊரடங்கு காரணமாக, மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை வரும் புனித ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தற்போது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தை ஒட்டி, இஃப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி, தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷேக்பரீத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

அவர் தனது மனுவில், சிவப்பு மண்டல பகுதிகளில், ஏழ்மையான நிலையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்  அல்லாதவர்களுக்கும், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இஃப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு, அரசு நிர்வாகத்தை அணுக அறிவுறுத்தி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.