ramzan peoples food chennai high court

தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தை ஒட்டி, இஃப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க அனுமதி கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா ஊரடங்கு காரணமாக, மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை வரும் புனித ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தற்போது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் ரம்ஜான் மாதத்தை ஒட்டி, இஃப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி, தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷேக்பரீத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

அவர் தனது மனுவில், சிவப்பு மண்டல பகுதிகளில், ஏழ்மையான நிலையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி இஃப்தார் உணவும், நோன்புக் கஞ்சியும் வழங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு, அரசு நிர்வாகத்தை அணுக அறிவுறுத்தி வழக்கைத் தள்ளுபடி செய்தது.