'மீண்டும் ராமேஸ்வரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை'- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

'Rameswaram-Kanyakumari Express train service again' - Southern Railway announcement!

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று ரயில் சேவைத் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ரயில் சேவையால், கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்றும், சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்துள்ள தொழில்கள் மேம்படும் என்றும் கூறப்படுகிறது.

Train
இதையும் படியுங்கள்
Subscribe