Rameswaram fishermen incident

ராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் கச்சத்தீவு -தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 27 பேரைக் கைது செய்தனர்.

Advertisment

இதனையடுத்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அனைத்து மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 27 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவதைதடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்துவரும் 18 ஆம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.