
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஒரு விசைப் படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்களைத் தாக்குவது, வலைகள் உட்பட மீன்பிடி பொருட்களைச் சேதப்படுத்துவது, பறிப்பது, கைது செய்வது போன்ற நிகழ்வுகளால் தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Advertisment
Follow Us