Advertisment

ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

Rameswaram fishermen are 17 people issue

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்குப் பிறகு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து இன்று மீன் பிடிக்கச் சென்றனர்.

Advertisment

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் - கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீனவர்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

fisherman Rameshwaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe