Advertisment

கொந்தளிப்புடன் கடல்... 50 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி!

rameshwaram sea weather

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாகத்தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும்எனச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னையைப் பொருத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8917cdaa-b295-4296-97bb-5b456b620410" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_171.jpg" />

Advertisment

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில்வழக்கத்தைவிடக்காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்றுமீன்பிடிக்கச்செல்லவில்லை. மேலும் இன்று மன்னார் வளைகுடா,லட்சத்தீவுஆகிய பகுதிகளில் வழக்கத்திற்குமாறாகக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் கடல் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கியதால்நங்கூரமிட்டுநிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டிஇருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படகுகளை மீட்கும் பணியை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

fisherman Rameshwaram sea weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe