ADVERTISEMENT

புரோகிதர்கள் வராததால் இறந்தவர்களின் அஸ்தியினை தாங்களாகவே கரைக்கும் உறவினர்கள்!

08:57 AM Jun 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


ஊரடங்கு காரணமாக ராமேஸ்வரம் பகுதிக்கு புரோகிதர்கள் வருகை இல்லாததால் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த அஸ்தியை எவ்வித சடங்கும் செய்யாமல் தாங்களாகவே கடற்பரப்பில் கரைக்கின்றனர் இறந்தவர்களின் உறவினர்கள்.

ADVERTISEMENT


இறந்தவர்களின் அஸ்தியை, புரோகிதர்களைக் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் கடற்பரப்பில் கரைத்தால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பது பலரின் நம்பிக்கை. இதனால் எங்கு இறப்பினும் இறந்தவர்களின் அஸ்தியினை பாதுகாத்துக் குறிப்பிட்ட வேளையில் ராமேஸ்வரம் கடற்பரப்பில், புரோகிதர்கள் துணையுடன் பூஜை புனஸ்காரங்கள் செய்து கரைப்பார்கள் இறந்தவர்களின் உறவினர்கள். தற்பொழுது கரோனா வைரஸ் தொற்றுக் காரணாமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முற்றிலும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது, பின் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட மண்டலங்களுக்குள் போக்குவரத்து இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


இதனால் தமிழகத்தில் மண்டலம் வாரியாக பேருந்துகள் இயக்கப்பட்டதையடுத்து கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்குச் சொந்த வாகனங்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் மற்றும் மறைந்த உறவினர்களின் அஸ்தியைக் கொண்டுவந்து அக்னி தீர்த்த கடற்கரையில் முறைப்படி பூஜைசெய்து கரைப்பதற்காகக் குடும்பத்துடன் பலர் வந்தவண்ணம் உள்ளனர்.


எனினும், கரோனா ஊரடங்கு காரணமாக இவர்களுக்காக பூஜை புனஸ்காரங்கள் செய்து தரும் புரோகிதர்கள் ராமேஸ்வரத்திற்கு வரவில்லை என்பதால் ஏமாற்றமடைந்து தாங்கள் கொண்டு வந்த அஸ்தியைத் தாங்களாகவே அக்னி தீர்த்தக் கடலில் கரைத்து விட்டு முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி வழிபாடு நடத்திவிட்டு கடலில் குளித்து விட்டுச் சென்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT