rameshwaram  fisherman incident involved srilankan navy

ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று உரிய அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே இரு படகுகளில் 15மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு இரு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15பேரை கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களின் விபரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாக இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத நிலையில் நேற்று மீண்டும் கடலுக்கு திரும்பிய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.