பிரபல நடிகை ரம்பா கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை 2010ல் திருமணம் செய்து அங்கேயே குடியேறினார். இவர்களுக்கு லாண்யா, சாஷா என்ற 2 மகள்கள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். விவாகரத்து கேட்டு கோர்ட் வரை சென்றனர்.
பின்னர் இருவரும் சமாதானமாகி கருத்து வேறுபாடு நீங்கி கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது 3வது தடவையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் வாழ்த்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில் இந்தி நடிகர் சல்மான்கான் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கனடா சென்றுள்ளார். இதனை அறிந்த ரம்பா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று சல்மான்கானை சந்தித்தார். அப்போது அவருடன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சல்மான்கானுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரம்பா, சல்மான் கானுடன் திரைப்படத்தில் நடித்த படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரம்பா 1990களில் கொடி கட்டி பறந்தவர். திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் நடிக்கவில்லை.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">