edappadi palanisamy

வன்னியர் சமூக பெருந்தலைவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி.

Advertisment

அதனை தொடர்ந்து, ராமசாமி படையாச்சியார் பிறந்த மாவட்டமான கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் அவரது மணி மண்டபம் அமைக்க அரசு சார்பில்நிலம் கையகப்படுத்தப்பட்டது. ராமசாமி படையாட்சியாரின் நூற்றாண்டையொட்டி அமைக்கப்படவுள்ள அவரது மணிமண்டபத்திற்கு இம்மாதம் 14-ம் தேதி சென்னை கோட்டையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

அதற்கான ஏற்பாடுகள் தலைமைச்செயலகத்திலும் கடலூரிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மணி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது கடலூரில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரை கண்ணு, வீரமணி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.