Advertisment

"காசு..பணம்..துட்டு..மணி...விட்டில் பூச்சிகளாகும் ஆசிரியர்கள்..!"

"இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல… அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்… உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாதிக்கனும்னு பேரசை உள்ள ஒருத்தர கண்டுபிடிக்கனும்…" சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது.

Advertisment

இதை வேத வாக்காக எடுத்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஆனந்த். ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.8,000 வட்டி என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தார். அதேபோல், தமக்கு சிபாரிசு செய்யும் நபர்களுக்கு ரூ.10,000 வட்டி என வலைவீசி பணத்தை வாரிச் சுருட்டி வருகிறார்.

Advertisment

"ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே ஆனந்திடம் பணம் கட்டிய நிலையில், இப்போது, நான் நீ என போட்டி போட்டு பணத்தை கட்டுகின்றனர். இதனால், ஆசிரியர் தொழிலை விட வட்டித் தொழிலில் அவர் அதிகம் கல்லா கட்டுகிறார். அவரிடம் பணம் கட்டும் 95 சதவீதம் பேர் நன்கு படித்த ஆசிரியர்கள். இது எங்கே போய் முடியுமோ?" என்று நம்மிடம் வேதனையை பகிர்ந்து கொண்டார் ராமநாதபுரத்தை சேர்ந்த நண்பர் ஒருவர்.

ramanathapuram teacher start on fake business peoples invest many crores

அவரே தொடர்ந்து, "சிலர் தங்களது சேமிப்பு பணத்தை மட்டுமின்றி நகைகளை அடகு வைத்தும் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கியும் இங்கு கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர். இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடலாம். எத்தனை முறை இதுபோன்று ஏமாற்று வேலை நடப்பதாக செய்திகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் உழைக்காமல் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை கொட்டிக்கொண்டு இருக்கின்றனர்"என்று ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

ஏழையா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் பணக்காரனா இருந்து நல்லவனா இருக்கறதுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. இதை ஆனந்த் மாதிரியான ஆட்கள்கிட்ட பணத்தை கட்டுகிற அப்பாவிகள் உணர்ந்தால் சரி.!

blame peoples teacher Ramanathapuram district Tamilnadu
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe