ADVERTISEMENT

பென்னிகுக் பொங்கல்!  பொதுமக்கள் கொண்டாட்டம்!!

07:44 PM Jan 15, 2019 | sakthivel.m

ADVERTISEMENT


தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைபெரியார் அணையை தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான தேக்கடியில் கட்டினார் கர்னல் ஜான் பென்னிகுக். அதன்மூலம் தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்ட விவசாய நிலங்களுக்கும் மக்களின் குடிநீருக்கும் முல்லை பெரியாறு அணை பெரிதும் பயன்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இப்படி தென்மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்திற்காக முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக்கின் பிறந்த நாளான தை 1ம் தேதி தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட பொது மக்கள் பொங்கல் திருநாளன்று கர்னல் பென்னிகுக் சிலை முன்பு பொங்கல் வைத்து வணங்கி வருவது வழக்கம்.

இந்த ஆண்டு தைப்பொங்கலன்று பென்னி குக்கின் 178ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பாலார்பட்டி கிராமத்தில் 20ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கூடலூர் என்பது சுருளிப்பட்டி பாளையம், கோவை தேவாரம் சின்னமனூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பென்னிகுக் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதன் பின் பாலார்பட்டி கிராமத்தின் சார்பில் பென்னிகுக் திருஉருவ படத்துடன் ஊர்வலமாக தேவராட்டம் ஆடியபடி அடி லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் நினைவு மண்டபத்திற்கு பொதுமக்கள் சென்றனர். அங்கு 45 பொங்கல் பானைகள் வைத்து பெண்கள் குழவை இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

முன்னதாக தேனிமாவட்ட மண்ணை நேசிக்கும் விதமாக மேற்குதொடர்ச்சிமலை திரைப்படம் எடுத்த இயக்குனர் லெனின் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொங்கல் பானையில் மூன்றுமுறை அரிசி இட்டு தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கர்னல் பென்னிகுக்கின் பேத்தியான டயனாஜிப் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT