இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மலைச்சாமி, 75 வயதான இவர், பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அளித்துள்ளார். அந்த மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும், பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் என்றும் கூறினார். மேலும் அந்த வீராங்கனை எங்கிருந்தாலும் விடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தனக்கு 16 வயதுதான் ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.