Advertisment

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டாஸ்... ஆட்சியர் அதிரடி!

ramanathapuram incident... Collector Action!

Advertisment

ராமநாதபுரத்தில் பள்ளி மாணவிகளுக்கு செல்ஃபோனில் பாலியல் தொல்லை கொடுத்ததாகபோக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

SCHOOL

ராமநாதபுரம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அபீப் முகமது, செல்ஃபோனில் ஆபாசமாக பேசி மாணவிகளுக்குத் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. பள்ளி மாணவி ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த மாதம்அபீப் முகமது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கார்த்திக் கொடுத்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவை அடுத்து பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் அபீப் முகமது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

teacher District Collector Sexual Abuse Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe