/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/boat_8.jpg)
இராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளர்ப்புத்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீன்பிடிக்க அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி வரை இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)