ramanathapuram district mahila court judgement

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே 10 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை அளித்ததாக, கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சிறுமிகளின் தந்தையைக் கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கை, ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி சுபத்ரா இன்று (18/02/2021) வழங்கினார்.

அதன்படி, தந்தைக்கு சாகும்வரை மரண தண்டனையும், ரூபாய் 8,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.