ADVERTISEMENT

மேளதாளத்துடன் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை...அசத்திய பொதுமக்கள்..!

05:02 PM Apr 01, 2019 | nagendran

ADVERTISEMENT

தாங்கள் கல்வி பயின்றதும், தங்களது குழந்தைகள் கல்வி பயின்று வருவதுமான அரசுப் பள்ளிக்கு மேள தாளத்துடன், ஊர்வலமாக சென்று பள்ளிக்குத் தேவையானப் பொருட்களை சீதனமாக வழங்கியுள்ளனர் சாயல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களும் பெற்றோர்களும்.

ADVERTISEMENT

220 மாணக்கர்களுடன், 7 ஆசிரியர்களை மட்டும் இயங்கி வருவது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சுமார் 65 வருட பாரம்பரியம் கொண்ட இப்பள்ளி ஆங்கில வழிக் கல்வியினை அடிப்படையாக அரசுப் பள்ளி. அருகில் பல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ வழியினைக் கொண்ட தனியார் பள்ளிகள் பல இருப்பினும், அதனை விட தரம் உயர்ந்த இப்பள்ளியில் மாணாக்கர்களை சேர்ப்பதில் இன்னும் ஆர்வம் குறையவில்லை பொதுமக்களுக்கு.!

இந்நிலையில், பள்ளிக்கு தேவையான குறிப்பாக ஸ்மார்ட் கிளாஸ் ப்ரொஜெக்டர், பீரோ, ஃபேன், நோட்டு, புத்தகங்கள், பென்சில், சேர், குடம், பாய் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் ரூ. இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை சொந்த செலவில் வாங்கி சாயல்குடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மேளதாளத்துடன் எடுத்து வந்து அருப்புக்கோட்டை சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர் பெற்றோர்களும் மற்றும் பொதுமக்களும். மனம் மகிழ்ந்த மாணக்கர்களும், ஆசிரியர்களுமாக இணைந்து பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT