Skip to main content

ஆபாசப்படம் எடுத்துள்ளதாக இளம்பெண்களிடம் மிரட்டி பணம் பறித்த ஆறு இளைஞர்கள் கைது!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

ramanathapuram -


"தன்னுடைய படத்தை மார்பிங் செய்து ஆபாசப்படமாக்கி இணையவெளியில் வெளியிடவுள்ளதாகவும், இல்லையெனில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும்" இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணிற்குப் பேச, இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஆறு இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.
 


ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூவிளத்தூர் செல்லும் சாலை பெண் ஒருவர் அருகில், கடந்த 08.06.2020-ஆம் தேதி அன்று தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்த போது அந்தப் பெண் மற்றும் உறவினரை 'TN 65 U 5836' என்ற ஆறு இளைஞர்கள் காரில் கடத்திச் சென்று தாக்கியதாகவும், மேலும், அந்தப் பெண் அணிந்திருந்த செயின், மோதிரம் போன்ற பொருள்களை திருடிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிய நிலையில், அதே பெண் தன்னுடைய படத்தை மார்பிங் செய்து ஆபாசப்படமாக்கி இணையவெளியில் வெளியிடவுள்ளதாக ஆறு இளைஞர்கள் மிரட்டியதாகவும் மாவட்ட எஸ்.பி.வருண்குமாரின் பிரத்யேக எண்ணிற்குத் தொடர்பு கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, பரமக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், அதே பகுதியினை சேர்ந்த சீதக்காதி, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகிய 6 நபர்கள் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்த நிலையில், அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
 

 


இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், "அதே பகுதியிலுள்ள போகலூர், பரமக்குடி சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இளம் பெண்கள், குறிப்பாக ஸ்கூட்டியில் செல்லும் சிறு வயது பெண்கள் மற்றும் கணவனை பிரிந்து வசிக்கும் பெண்களை தங்களின் வலையில் சிக்க வைத்து மேலும் கணவனை விட்டுத் தவறான உறவு ஈடுபடும் பெண்களைக் கண்டறிந்து அவர்களை பின்தொடர்ந்து அவர்களை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவம், மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணுடன் தொடர்பில்  உள்ளவர் வரையும் அழைத்து அவர்கள் இருவரையும் தனிமையில் உல்லாசமாக இருக்கும் பொழுது அதையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு இவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அந்தப் பெண்களிடமிருந்து நகை, தங்கச் செயின் மோதிரம் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களைத் தொடர்ந்து பறித்து உல்லாசமாக இருந்தது." உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது 294(b), 363, 342, 386, 395,506(ii), 307 IPC, And 4 of WH ACT & 67 IT ACT பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

“தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளோம்” - ஓ.பி.எஸ்.!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
“We have applied for an election symbol” - O.P.S.

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் பக்கெட் வாளி, பலாப்பழம் சின்னம், திராட்சைப் பழம் சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். என்னுடைய பலத்தை நிரூபிப்பதற்கு மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர் வகுத்து தந்த சட்டவிதியின் படி தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அ.தி.மு.க.வை 50 ஆண்டுகளாக வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையில் நாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தலையாய குறிக்கோள். இதில் இருந்து மாறுபடக் கூடது என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பது தான் ஒன்றறை கோடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடும், எண்ணமும் ஆகும்” எனத் தெரிவித்தார்.