/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rama_3.jpg)
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாவட்டம் முழுவதும் இன்று கொரோனா நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் இன்று ஆய்வு மேற்கொண்டவர் குறிப்பாக இப்பகுதியில் பலரும் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருவதால் கொரொனா தாக்கம் இருக்கலாம் எனவும், இதனால் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய சாலை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கவும், தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rama1_1.jpg)
கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் மற்றும் கீழக்கரை நகராட்சி கமிஷனர் தனலட்சுமி, கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா மற்றும் காவல்துறை அதிகாரிகள் நகராட்சி துறையினர், வருவாய் துறையினர் அனைவரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)