Skip to main content

ராமநாதபுரத்தில் கடும் வறட்சி - வன விலங்குகள் தவிப்பு

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் பலியானது. மற்றொரு மானுக்கு காயம் ஏற்பட்டது.

 

m

 

ராமநாதபுரம் மாவட்டம் என்.மங்கலம், அஞ்சுகோட்டை , சிறுகம்பையூர், மங்களகுடி ஆகிய கண்மாய் காட்டு பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளது. தற்போது, இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மான்கள் குடிதண்ணீருக்காக கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது. இன்று (02-06-2019) காலை தண்ணீர் குடிக்க வந்த கர்ப்பிணி மான், அடையாளம் தெரியாத  வாகனம் மோதி உயிரிழந்தது. மற்றொரு மானுக்கு காயம் ஏற்பட்டது.

 

m

 

கிராம மக்கள் காயம்பட்ட மானை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

இந்த பகுதியில் மான்கள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல, விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும், காட்டு பகுதியில் குடிதண்ணீர் தொட்டி அமைத்தால் வன விலங்குகள் காட்டை விட்டு வெளியில் வராது. இதற்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்