Advertisment

பிரசவத்தின் போது ஊசி வைத்து தைத்த மருத்துவர்!

பிரசவம் முடிந்து பெண் குழந்தை ஈன்ற நிலையில், கவனக்குறைவாக மருந்து நிரப்பப்பட்ட ஊசியுடன் கூடிய சிரிஞ்சினை பெண்ணின் பிறப்பு உறுப்பிற்குள் வைத்து தைத்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்

Advertisment

ramanadhapuram district women hospital doctors

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவ்வாய்க்கிழமை இரவினில் அருகிலுள்ள மறவாட்டி வலசை கிராமத்தை சேர்ந்த ரம்யா பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகுந்த சிரமத்திற்கிடையே புதன்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த நிலையில், தையல் போடுவதற்காக தயாராகிய மருத்துவக்குழு மருந்து நிரப்பப்பட்ட ஊசியுடன் கூடிய சிரிஞ்சினையும் அங்கே வைத்து தைத்திருக்கின்றது.

ramanadhapuram district women hospital doctors

Advertisment

சற்று நேரத்தில் வலி அதிகமாகி ரம்யா துடிதுடித்த நிலையில் மேற்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கேயும் பலனளிக்காததால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட, பிறப்புறப்பில் மருந்து நிரப்பப்பட்ட ஊசியுடன் கூடிய சிரிஞ்ச் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு ரம்யாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறன்றனர்.

இந்நிலையில், கவனக்குறைவாக ஊசி வைத்து தைத்த தகவல் பரவியதையடுத்து, ரம்யாவின் உறவினர்கள் உச்சிப்புளி அரசு மருத்துவமனை முன், கவனக்குறைவாக நடந்து மருத்துவர் மற்றும் செவிலியரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கவனக்குறைவாக பணி மேற்கொண்ட மருத்துவர் ஜாசீர் மற்றும் செவிலியர் அன்பகச்செல்வி ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவிக்க போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.

Doctors incident Ramanathapuram district suspended
இதையும் படியுங்கள்
Subscribe